விடுதி உரிமையாளர் அசோசியேஷன் சார்பில் கருத்தரங்கம்

கோவையில் விடுதி உரிமையாளர் அசோசியேஷன் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் கலையரங்கத்தில் விடுதி உரிமையாளர்கள் அசோசியேசன் சார்பாக நடந்த கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை உதவி ஆணையர்  சட்டம் & ஒழுங்கு   திரு . சுரேஷ்,  கருத்தரங்கில் பேசும் போது, கோவை மாவட்டத்தில் பணிபுரிவோர் மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவியர்களுக்காக விடுதி நடத்தி வரும் உரிமையாளர்கள் அனைவரும் அரசாணையில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என கூறினார். மேலும் அனைத்து விடுதி உரிமையாளர்களுக்கும் சரியான வகையில் உரிமம் கட்டாயமாக இருத்தல் வேண்டும் எனக் கூறிய அவர்,  இனி வரும் காலங்களில் விடுதிகளில் தங்கும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எனவும்,  அதற்கு உண்டான பணியை செய்தல் அவசியம் எனவும் கூறினார். விதிமுறைகளை பின்பற்றாத,விடுதி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஒரு நபருக்கு ஒரு விடுதி உரிமம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறினார். இக்கருத்தரங்கில் தேவராஜ், ஆனந்தராமன், தமிழ்மணி, சந்திரசேகர், செந்தில்குமார் உள்ளிட்ட  விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.