மகளிர் சாம்பியன்ஷிப் அறிமுகம்

புது தில்லியில் உள்நாட்டு கிரிக்கெட்டில் 15 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஒன்டே கிரிக்கெட் போட்டியை பிசிசிஐ அறிமுகம் செய்கிறது.

கரோனா சூழல் காரணமாக கடந்த 2020 முதல் 2 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் பெரு வாரியாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,இந்த ஆண்டு  முழுமையான சீசனை நடத்தும் முனைப்பில் பிசிசிஐ இருக்கிறது.

அதன்படி செப்டம்பர் 8 முதல் 25 வரை நடைபெற இருக்கும் துலீப் கோப்பை போட்டியுடன் சீசன் தொடங்குகிறது. அடுத்து ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பழைய ஃபார்மட்டில் டிசம்பர் 12 முதல் பிப்ரவரி 20 வரை நடை பெற இருக்கிறது.

இதை தவிர, இளம் திறமையாளர்களைக் கண்டறி யும் வகையில் முதல் முறையாக 15 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஒன்டே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட இருக்கிறது.