கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரியில் கருத்தரங்கம்

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் கார்த்திக் பாபு வரவேற்புரை வழங்கினார்.

இதில் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வயதானோர் முழங்கால் வலிக்கான சிகிச்சையில் பிசியோதெரபியின் முக்கியத்துவத்தை பற்றி வலியுறுத்தினார்.

‘It hurts to move – முழங்கால் வலியின் நடைமுறை சான்றுகள்” என்ற தலைப்பில் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் டாக்டர் தேவ் ஆனந்த் ராமநாதன் கருத்தரங்கத்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரியும் ரமேஷ் என்பவருக்கு அவரது 20 வருட கால பிசியோதெரபி சேவையை முன்னிட்டு விருது வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரியின் துணை முதல்வர் கல்பனா நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரியின் இயக்குனர் எட்மன்.எம்.டிகோடோ, என்.ஜி.பி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ராமசாமி, கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியின் முதல்வர் மாதவி, கே.எம்.சி.ஹெச் தொழில் சிகிச்சை கல்லூரியின் முதல்வர் சசிதர்ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.