முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  காலமானார்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை 5.05 மணிக்கு உயிர் பிரிந்தது. உடல் நலக்குறைவால், 93ஆவது வயதில், அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார். 1924ஆம் ஆண்டு குவாலியரில் பிறந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். பிரதமராகும் தகுதி பெற்றவர் என்று நேருவால் பாராட்டப்பட்ட வாஜ்பாய், கவிஞரின் மகனாக மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தவர். அரசியல் அறிவியலில் எம்.ஏ பட்டம் பெற்றவர் வாஜ்பாய். 1939-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைந்தார் வாஜ்பாய். ஆர்ய சமாஜத்தின் இளைஞரணி அமைப்பிலும் வாஜ்பாய் உறுப்பினரானார். 1947-ஆல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர பிரச்சாரகராக தேர்வு பெற்றவர். நாடு முழுக்க சென்று பாரதிய ஜனதா கட்சியை வளர்க்க பாடுபட்டார்.