ஓபன் டென்னிஸ்ல் வெளியேறினார் ரபேல் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 4 வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் ரபேல் நடால் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

அமெரிக்க வீரரான பிரான்சிஸ் டியாஃபோ உடன் மோதிய ரபேல் நடால், 6-4, 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

இந்த வருடத்தில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் தோல்வியை சந்தித்துள்ளார் ரபேல்  நடால். இதன் மூலம் தனது 23 வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பையும் அவர் இழந்தார்.

இந்த வருடத்தில் மட்டும் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரஞ்சு ஓபன் போட்டிகளில் 2 பட்டங்களை வென்றுள்ளார். காயம் காரணமாக, விம்பிள்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு பின்னர் நடால் வெளியேறினார்.

அமெரிக்க ஓபன் தொடரில் பங்கேற்ற அவர், தனது 23 வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க வீரரால் தோற்கடிக்க பட்டார்.

இதுவே ரபேல்  நடாலின் கடைசி அமெரிக்க ஓபன் தொடராக இருக்க கூடும் என, சர்வதேச டென்னிஸ் வட்டாரத்தில் குறிப்பிடுகிறது.