அலட்சியங்களும் அதன் விளைவுகளும்

சிறு அலட்சியமும், பல விளைவுகளும்!!!

சில நேரங்களில் நாம் காட்டும் சிறிய அலட்சியம் கூட நம் வாழ்க்கையையே திருப்பி போடச் செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் நாம் ஏன் பெரிதாக எடுக்க வேண்டும் என்று விட்டுவிடும் சிறிய பிரச்சனைகள் கூட நாளை பூதாகரமாக உருவெடுக்கும் நிலமையை ஏற்படுத்தும்.

உதாரணத்திற்கு, நடந்து போகும் வழிகளில் எண்ணற்ற திறந்து கிடக்கும் குழிகள் இருப்பதை பார்த்து அதைக் கண்டு கொள்ளாமல் சென்று விடுகின்றோம். ஏற்கனவே அலட்சியமாக விடப்பட்டதை நாமும் அலட்ச்சியப்படுத்திவிட்டு செல்கிறோம். இரவு நேரங்களில் பயணம் செய்யும் இருசக்கர வண்டி ஓட்டுனர்களோ அல்லது பொது மக்களோ அதில் விழுந்துவிடும் அபாயம் நிறைய உள்ளன.

நாம் சற்று சிந்தித்து முன்னதாகவே செயல்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கோ அல்லது மாநகராட்சி அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் செய்து இருந்தால், தக்க நடவடிக்கைகள் மூலம் பல விபத்துகளை தவிர்த்து இருக்கலாம்.

அதேபோல் பல குடும்பத்தில் இன்று சிக்கல்களும் பிரச்சனைகளும் உருவெடுத்து நிற்பதர்கான மூலக் காரணமே ஒருவருக்கொருவரின் அலட்சிய செயல்களே ஆகும். இன்று இந்தியாவில் மட்டும் பல லட்ச விவாகரத்து வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

ஒருவரை ஒருவர் பார்ப்பதற்கு கூட நேரம் இல்லாமல்  ஓடிக்கொண்டிருக்கும் இப்போதைய வாழ்க்கை சுழலில் நாம் நமது உணர்வுகளையும் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்வதையே மறந்து விட்டோம்.

அனைவரது வாழ்க்கையிலும் இன்பம் துன்பம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நாம் சந்திக்கும் ஒவ்வொரு நாளையும், அதில் நடந்த நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டு ஒருவொருக்கொருவர் ஆறுதலான வார்த்தைகளையும் கருத்துகளையும் பரிமாரிக்கொண்டாலே நம்மை சுற்றிக் கொண்டிருக்கும் பாதி குழப்பங்கள் அகன்று விடும்.

ஒன்றை அழிப்பது என்பது மிகவும் எளிது, அதே ஒன்றை உருவாக்குவது என்பது எவ்வளவு கடினம் என்று உருவாக்கியவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

இன்னொரு வருத்தத்திற்குரிய விஷயம், பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்குள் உள்ள பாசப் போராட்டத்தின் நிலை. இன்றைய சுழலில், பொருளாதாரத்தின் அடிப்படையில் தாய் தந்தை இரண்டு பேருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் பலரின் நிலைமையாய் உள்ளது.

இதனால் அவர்களுடைய பிள்ளைகளுடன் செலவு செய்யும் நேரம் படு மோசமாக குறைந்து விட்டது. இது பிள்ளைகளுக்கு அழ்ந்த மனத்தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையும் அவர்களது பருவமும் தவறான பாதைகளுக்கு வழி வகுக்குகிறது.

நம்மை மிகவும் நேசிக்கும் நபர்கள், நம்மையும் நம் சூழ்ல்நிலைகளையும் புரிந்துக்கொண்டவர்கள் என்பதற்காக எப்பொழுதும் நாம் இதை சாதமாக எடுத்துக்கொண்டு, ஒரு எந்திரத்தைப் போல் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டால், அது நம்மை நாமே உயிரோடு புதைத்துக் கொல்வதற்கு சமம்.

அன்பான வார்த்தைகளையும், கருத்துகளையும், செயல்களையும் ஒரு ஐந்து நிமிடம் பகிர்ந்து கொள்வதால் நாம் ஒரிவிதத்திலும் தாழ்ந்து விட மாட்டோம். அலட்சிய விளைவுகளை தவிர்ப்பது நம் கையில் தான் உள்ளது.