ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் மாணவர் மன்றத் துவக்க விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32 வது மாணவர் மன்றத் தொடக்கவிழா நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் சித்ரா அனைவரையும் வரவேற்று, மாணவியர் திறமைகளோடு தலைமைப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பெங்களூருவில் உள்ள வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் துணைத்தலைவர் ரம்யா ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, குறிக்கோளைத் தீர்மானிக்க வேண்டியதன் அவசியம், அதற்கான வழிகள் குறித்து எடுத்துரைத்தார்.

பின்னர், மாணவர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மன்றப் பொறுப்பாளர்கள் பதவியேற்றனர்.