வால்பாறை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம்

வால்பாறை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவையை அடுத்த வால்பாறை பகுதியில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. மேலும் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை, ஆனைமலை, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் மூன்று நாட்களுக்கு செல்ல வேண்டாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது