உலக தேங்காய் தினம்

பாரம்பரிய மற்றும் அத்தியாவசிய பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முக்கிய தினங்கள் கொண்டாடப்படுகிறது.

அதன்படி செப். 2 ம் தேதி உலக தேங்காய் தினமாக குறிப்பிடத்தக்கது.

சமையலில் அடிக்கடி தேவைப்படும் முக்கியப் பொருட்களில் ஒன்று தேங்காய்.அடிக்கடி உணவில் சேர்த்தால் வயிற்றுப் பிரச்னைகள், வாய்ப்புண் போன்ற பிரச்னைகள் குணமாகும். இது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி கூந்தல், சருமப் பராமரிப்பிலும் இது முக்கியப்பங்கு வகுக்கிறது

நகரப்பகுதிகளில் வசிப்பவர்களில் சிலருக்கு ‘எப்படி நல்ல தேங்காயாக பார்த்து வாங்குவது’ தெரியாது அவர்களுக்கு சின்னதா ஒரு டிப்ஸ்

தட்டிப் பார்க்கலாம்

தட்டும் போது ‘கணீர்’ சத்தம் கேட்டால் நல்ல தேங்காய். இதற்கு மாறாக ‘பொத்’ சத்தம் கேட்டால் உள்ளே கெட்டுப்போய் இருக்கும்.

தேங்காயை எடுத்து சுற்றிலும் தட்டி பார்த்து, ‘கணீர்’ என சத்தம் வந்தால் மட்டுமே வாங்க வேண்டும்.

வீட்டில் தேங்காய் எப்படி வைக்க வேண்டும்

தேங்காயை தலைகீழாகவோ, சாய்வாகவோ வைக்கக் கூடாது. குடுமிப்பகுதியை மேல் நோக்கியும், தலைப்பகுதியை தரைமீதும் உள்ளவாறு வைக்க வேண்டும். அப்போதுதான்  தண்ணீர் அழுத்தம் கண்களின் மீது படாது விரைவில் தேங்காயும் கெடாது.

கெட்டுப்போகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

தேங்காயை உடைத்து அதன் ஒரு பாதியை உடனடியாக பயன்படுத்தி விடுவோம். ஆனால் மறுபாதியை ஸ்டாக் வைக்கும் போது கெட்டு போகிறது.

இதுபோன்ற நேரத்தில் தேங்காயின் உள்பகுதியில் சிறிதளவு உப்பை தடவி பாதுகாப்பாக வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

 

 

– கோமதிதேவி.பா