மக்கள் குவியும் மலர் சந்தை

உ லகின் மிகப்பெரிய மலர் சந்தை மற்றும் அதிகளவில் மலர்கள் ஏலம் விடப்படும் இடம், ஆல்ஸ்மீர் மலர்கள் ஏலம் (Aalsmoer Flower Auction). நெதர்லாந்தில் சுமார் 128 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது இந்த மலர்கள்

க்வடார், கென்யா, கொலம்பியா, எத்தியோப்பியா உள்பட உலகின் எல்லா இடங்களிலும் இருந்து மலர்கள் இங்கே கொண்டு வருகின்றன. தினமும் சுமார் இரண்டு கோடி மலர்கள் விற்பனை யாகின்றது

காதலர் தினம், கிறிஸ்துமஸ், நியூ யேர் போன்ற நாட்களில் விற்பனை இன்னும் மும்முரமாக நடக்கும்.

மலர்களின் தரத்தைச் சோதிப்பதற்காக 30 விதமான தரச் சோதனைகளை இங்கே செய்கிறார்கள். சோதனைக்குப் பின் ‘ஏ1, ஏ2, பி’ என்று மலர்கள் வரிசைப்படுத்தப்படுகிறது.அதன் பின்னர் அதற்கேற்ற விலையில் சந்தையில் விற்கப்படுகிறது.

 

– கோமதிதேவி. பா