“இலக்கியத்தின் மூலம் வாழ்வின் அனுபவங்களைப் பெற முடியும்”

சங்கரா கல்லூரியில் இலக்கிய மன்ற துவக்க விழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பில் தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா நடைபெற்றது.

தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் இந்துமதி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் சதீஷ்மோகன் தமிழ் இலக்கிய மன்றம் குறித்து அறிமுக உரை ஆற்றினார். விழாவில் தமிழ் இலக்கிய மன்ற உறுப்பினர்கள் அறிமுகம் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியின் கல்விப்புல முதன்மையர் (இணை) பேராசிரியர் ராமசாமி கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவது இலக்கியங்களுக்கு என்று நேரத்தை ஒதுக்க வேண்டும். அதன் மூலம் வாழ்க்கை அனுபவங்களைப் பெற முடியும் என்றும், மொழிப்படங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களால் மட்டுமே உணர்வு பூர்வமாகப் பாடங்களைக் கற்றுத் தர முடியும் என்றும் கூறினார்.