2022 கொழுக்கட்டையால் 8 அடியில் விநாயகர்: உலக சாதனை புரிந்த அமிர்தா கல்லூரி

கோவை கே.என்.ஜி புதூர் பகுதியில் உள்ள அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி சார்பில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் கலாம் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து 31 தானியங்களை கொண்டு 2022 கொழுக்கட்டைகளால் 8 அடியில் விநாயகர் உருவத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.

உலக சாதனை புத்தக நிறுவனத்தினரால் 60 நிமிடம் காலக்கெடு வழங்கப்பட்ட நிலையில், 29 நிமிடங்கள் மற்றும் 55 வினாடிகளில் விநாயகர் உருவத்தை உருவாக்கி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். முன்னனதாக நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்ட அந்நிறுவனத்தினர் சாதனைக்கான சான்றிதழை கல்லூரி முதன்மை செயலாளர் சுரேஷ்குமாரிடம் வழங்கினார்.

இதில் 66 முதலாமாண்டு மாணவர்கள் 2022 கொழுக்கட்டைகளை செய்து உலகலாவிய சாதனையை படைத்துள்ளனர். அதில் கம்பு, கேழ்வரகு, திணை, வெள்ளை மற்றும் சிவப்பு அவல், பச்சைப்பயிறு, கொள்ளுப்பருப்பு, முருங்கைக்கீரை, ஏலக்காய், துவரம்பருப்பு, கடலைபருப்பு, முந்திரி, பாதாம், தேங்காய், முளைகட்டிய பயிறு, வெள்ளை உளுந்து, இலை கொழுக்கட்டை, கருப்பட்டி, வெள்ளம், வெள்ளை எள் மற்றும் கருப்பு எள் கொண்டு உணவு மேலாண்மை துறை மாணவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த கொழுக்கட்டைகளை சுகாதார முறையில் தயாரித்துள்ளனர்.

கலாம் உலக சாதனை நிறுவனத்தின் இயக்குனர் குமரவேல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கி, அமிர்தா கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருங்கினைந்த முயற்சியை பாராட்டினார்

அனன்யாஸ் நெஸ்டின் இயக்குனர் உமா யுவராஜ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், இயற்கையுடன் இணையும் வகையில் கொழுக்கட்டைகளை கொண்டு உருவாக்கியதாக மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர் பேக்கர்ஸ் குரூப்சின் இயக்குனர் பர்வேஷ், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு வாழ்த்து கூறினார்.

அமிர்தா கல்லூரியின் முதன்மை செயலாளர் சுரேஷ்குமார், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஈடுபாடு, ஒற்றுமையை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.