
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக பெரியார் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் மற்ற துறை சார்ந்த மாணவிகளும் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாகவும், உணவில் புழு இருப்பதாகவும், குடிப்பதற்கு குளிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும் மாணவிகள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவியர் விடுதிக் காப்பாளர், மாணவிகளுக்கு வழங்கக்கூடிய மூன்று வேளை உணவுகளும் தரமற்ற முறையில் வழங்குவதாகவும், உப்பு, காரம், புளி உள்ளிட்டவைகளை கூடுதலாகப் பயன்படுத்தி, மாணவிகள் சாப்பிட முடியாத அளவில் செய்வதாகவும், அதில் புழு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
மாணவிகள் தட்டிக்கேட்டால் விடுதியை விட்டு வெளியே செல்லுங்கள் என்று மிரட்டுவதாகவும், குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்ச்சியாக இதே நிலை நீடித்து வந்தததால், விடுதி மாணவிகள் இன்று காலை 9.00 மணியில் இருந்து விடுதி மாணவிகள் சாப்பாட்டு தட்டுடன் விடுதி வாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரமற்ற உணவு, வழங்கு தல் மற்றும் விடுதி காப்பாளர் மிரட்டல், குறித்து மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
-கோமதிதேவி. பா