நடைபாதை அகற்றத்தால் கிராஸ்கட் ரோட்டில் தேங்கிய மழை நீர்

– சிரமத்துக்குள்ளாகும் பொதுமக்கள்

கோவையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

நகரில் பெருமளவு முக்கிய சாலை முதல் சிறு தெருக்களில் உள்ள சாலைகள் வரை சீராக இல்லாமல் உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சரி செய்யப்படாமல் உள்ளது.

இதனால் சாலைகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கி வாகன ஒட்டிகளும், பாதசாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

இந்த நிலையில் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பாதசாரிகளுக்காக போடப்பட்ட நடைபாதை அகற்றப்பட்டுள்ளதால் அந்த இடத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் நடந்து செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

மாநகராட்சி நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.