இந்திய தொழில் வர்த்தக சபை கோவையின் புதிய தலைவராக ஸ்ரீ ராமலு பதவியேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவையின் (Indian Chamber of Commerce and Industry, Coimbatore) 88 வது வருடாந்திர பொதுகுழுக் கூட்டம் அவிநாசி சாலையில் அமைந்துள்ள சேம்பேர் டவர்ஸில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் சபையின் 17 வது புதிய தலைவராக கே.ஜி குரூப்சின் இயக்குனர் ஸ்ரீ ராமலு (2022 – 2024) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன்னதாக சபையின் (2018 – 2022) துணை தலைவராக பதவி வகித்துள்ளார்.

உடனடி முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை முன்னெடுத்து செய்த பல்வேறு நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு பேசினார். கோவையின் வளர்ச்சிக்காக செய்த செயல்கள் குறித்தும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளை உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது பற்றியும் தனது உரையில் எடுத்துரைத்தார். சமூகம் சார்ந்து செய்த செயல்பாடுகள் பற்றியும் பட்டியலிட்டு பேசினார்.

மேலும் தன்னுடன் பணியாற்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் சபையின் முன்னாள் தலைவர்கள் பலர் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தலைவர் ஸ்ரீ ராமலுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

முன்னதாக தனக்கு வழிகாட்டிய முன்னாள் தலைவர்களுக்கு ஸ்ரீ ராமலு நன்றி தெரிவித்தார்.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவையின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.