வித்தியாசமான கெட்டப்பில் விஷால்

நடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார்.

விஷால் ‘மார்க் ஆண்டனி’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் AAA படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷாலின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டர் விஷாலின் தோற்றதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் நிறைய முடி மற்றும் தாடியோடு கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பைப் படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

– கோமதிதேவி. பா