உடலைத் தயார்படுத்த உதவும் யோகா

“ஆனந்தமாக இருக்க தேவையான இரசாயனத்தை உங்களுக்குளேயே உருவாக்க யோகா ஒரு சிறந்த வழி. இயல்பிலேயே நீங்கள் ஆனந்தமாக இருக்க முடிந்தால், வெளி சூழ்நிலையை கையாள்வது என்பது மிகச் சாதாரணமானது”- சத்குரு

யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி செய்யும் பயிற்சி.இதன் மூலம் மனதையும் உடலையும் இணைத்து ஆரோக்கியத்தை பெற முடியும்.

முதுகு வலி நிவாரணத்திற்கு உதவுகிறது

குறைந்த முதுகுவலி உள்ளவர்களுக்கு வலியைக் குறைப்பதற்கும் இயக்கத்தை மேம்படுத்துவதற்கும் அடிப்படை நீட்சியைப் போலவே யோகா மிகவும் சிறந்தது.

அமெரிக்கன் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ், நாள்பட்ட குறைந்த முதுகுவலிக்கு யோகாவை முதல் வரிசை சிகிச்சையாகப் பரிந்துரைக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நன்மை

வழக்கமான யோகா பயிற்சி மன அழுத்தம் மற்றும் உடல் வீக்கத்தைக் குறைக்கும். ஆரோக்கியமான இதயத்திற்குப் பங்களிக்கும்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக எடை உட்பட இதய நோய்க்குப் பங்களிக்கும் பல காரணிகளையும் யோகா மூலம் தீர்க்க முடியும்.

நன்றாகத் தூங்க உதவும்

ஒரு சீரான படுக்கை நேர யோகப் பயிற்சியானது, சரியான மனநிலையைப் பெறவும், உறங்குவதற்கும் உங்கள் உடலைத் தயார்ப்படுத்த உதவும் எனச் சொல்லப்படுகிறது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் படி, யோகா மன அழுத்த மேலாண்மை, மன ஆரோக்கியம், நினைவாற்றல், ஆரோக்கியமான உணவு, எடை இழப்பு மற்றும் தரமான தூக்கத்தை ஆதரிக்கிறது என்று அறிவியல் சான்றுகள் காட்டுகின்றது

உடல் ரீதியான பலன்கள் (Physical Benefits):

மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு பயிற்சி

ஓய்வு நிலையில் இருந்து திரும்பும் உடலுக்கு புத்துணர்வு அளிக்கிறது.

நாட்பட்ட நோய்களில் இருந்து விடுவித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முதுகுத்தண்டை (Spine) வலுவூட்டி உறுதியாக்குகிறது. முதுகுவலி (Back pain), உடல் சோர்விலிருந்து விடுவிக்கிறது.

மன ரீதியான பலன்கள் (Mental Benefits):

ஞாபக சக்தி (Memory), மனக்குவிப்புத் திறன் (Focus / Concentration) மற்றும் செயற்திறனை அதிகரிக்கிறது.

உடல், மனம் மற்றும் உணர்வுகளை நிலைப்படுத்துகிறது.

மன அழுத்தம் (Depression), படபடப்பு, மனத்தவிப்பு (Anxiety) ஆகியவற்றிலிருந்து விடுவிக்கிறது.

அனைவருடனும் இணைந்து செயல்படும் திறனையும், பழகும் முறையையும் மேம்படுத்துகிறது.

 

 

 

– பா. கோமதி தேவி