ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் பிரதமரிடம் கலந்துரையாடல்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் என்.சி. சி மாணவர் அஜய் தேவன், சுதந்திர தினத்தன்று நடைபெற்ற தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் பிரதமர் நரேந்திர மோடியிடம் கலந்துரையாடினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர் அஜய் தேவன். இவர் இயந்திரவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். தற்போது நடைபெற்ற 76 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் சார்பாக நடைபெற்ற ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத் என்கின்ற தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் தமிழகத்தின் சார்பாக கலந்து கொண்டார்.

முன்னதாக, தேசிய அளவில் பல்வேறு பகுதியில் பல்வேறு தருணங்களில் நடைபெற்ற ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டார்.

மேற்கொண்டு தமிழகத்தின் தேசிய மாணவர் படை இயக்குநகரத்தின் குழு சார்பாக டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் ஆகியவற்றை பற்றி கலந்துரையாடினார். இந்த மிகச் சிறந்த தருணத்தை பற்றி விளக்கும்போது மாணவர் அஜய் தேவன் மிக்க மகிழ்ச்சி கொண்டார்.

தமிழகத்தின் தேசிய மாணவர் படை சார்பாக கலந்து கொண்டது குறித்து எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, துணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், கல்லூரி முதல்வர் அலமேலு, துணை முதல்வர் கருப்புசாமி மற்றும் என்.சி.சி அதிகாரி லெப்டினன்ட் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.