வால்பாறையில் நீரில் மூழ்கிய  வீடுகள்

கோவை மாவட்டம், வால்பாறையில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின. அரசு பேருந்து பணிமனையும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. பல இடங்களில் மரம் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையில் மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியை சேர்ந்த வேனாங்கண்ணி என்பவர் மழை நீரில் அடித்து செல்லப்பட்டார். தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.