ஆர்.வி கல்லூரியில் செல் வளர்ப்பின் நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம்

டாக்டர். ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பாக பேரவைக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உயிர் தொழில்நுட்பவியல் துறை உதவிப்பேராசிரியர் மிருதுபாஷினி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.

கோவை சி.எம்.எஸ். கலை அறிவியல் கல்லூரியின் உயிர் தொழில் நுட்பவியல் துறை
உதவிப்பேராசிரியர் சுஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விலங்கு செல் வளர்ப்பின் நுட்பங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி பேசுகையில்: மனித உயிரணு வளர ரத்தம் ஒரு முக்கிய அங்கமாகும். செல் உருவாக்கம் என்பது சிக்கலான செயல் முறையாகும். விலங்கு உயிரணுவை தனிமைப்படுத்தி அதனை வளர்க்கலாம். வைரஸ்கள் உற்பத்திக்காக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வளர்க்கப்படுகின்றன. செயற்கை திசுக்கள் மற்றும் உறுப்புகளை உருவாக்க திசு வளர்ப்புகளை பயன்படுத்துதல் திசு பொறியியல் என்று கூறப்படுகிறது.

செல் கலாச்சார ஊடகங்கள் செல் வளர்ச்சிக்கு உதவுகின்றன என்று பல கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.