ஒன்பது ஆண்டுக்கு பின் நிரம்பிய குறிச்சி குளம்

கோவை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் கோவையில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் கோவை குறிச்சி குளம் நிரம்பி வழிகின்றது .இதன் காரணமாக கோவை பாலக்காடு சாலையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி அருகில் குளம் நிரம்பி பள்ளியின் தடுப்பு சுவரை எட்டும் தருவாயில் உள்ளது.

மேலும் குளத்தில் இருந்து வெளியேறும்  தண்ணீர் காளவாய் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்கு மத்தியில் பாய்ந்து செல்கிறது இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்