பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் பேச்சு போட்டி

கோவையில் உள்ள கே கே ஜி எம்பவரிங் கிட்ஸ் பள்ளி சார்பில் சிறந்த இளைய குடிமகனை தேர்வு செய்வதற்கான மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டது.கே கே ஜி எம்பவரிங் கிட்ஸ் பள்ளி மற்றும் யங் மதர்ஸ் கிளப் சார்பில் கோவையில் உள்ள இடையர்பாளையம் பகுதியில்

சிறந்த இளைய குடிமகன் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான போட்டி நடத்தப்பட்டது . இந்த போட்டியில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் . இந்த போட்டியில் , இயற்கையை நேசிப்பது, சுதந்திர இந்தியா உள்ளிட்ட தலைப்புகளில் ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது . இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . குறிப்பாக இயற்கை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் , காய்கறி செடிகள் வழங்கப்பட்டது .