கோவையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

கோவை வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை மாவட்ட அதிமுக பிரமுகர் செந்தில்கார்த்திகேயனின் இல்ல விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு அவரது தொண்டர்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர்.

விமான நிலைய நுழைவாயில் முதல் அவிநாசி சாலை மெயின் ரோடு வரை இரு புறங்களிலும் நின்று அதிமுகவின் கொடிகளை ஏந்தியும், வரவேற்பு பதாகைகளை ஏந்தியும், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் நின்றவாறு தொண்டர்களுக்கு நன்றிகளையும் வணக்கத்தையும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தவாறு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சார வாகனத்தில் பயணித்தார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று தமிழக முதல்வர் வந்ததற்காக உற்சாக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.