பாரம்பரிய நடன கலையை மீட்க நிகழ்ச்சி

கோவையில் உள்ள தனியார் நடன நிறுவனத்தின் சார்பில் பாரம்பரிய நடன கலையை மீட்டெடுப்பதற்கான விழிப்புணர்வு, நடன நிகழ்ச்சி நடைபெற்றது .

கோவையை அடுத்த இடையர்பாளையம் பகுதியில், உள்ள தனியார் நடன பள்ளியின் சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது . இந்த தனியார் நடன பள்ளியின் சார்பில் , மாணவர்களுக்கு பாரம்பரிய நடன பயிற்சியும் அளிக்கப்படுகிறது . இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய நடன கலைகளை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிலம்பாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை மாணவர்கள் செய்தனர். மேலும் படுகர்களின் பாரம்பரிய நடனத்தையும் மாணவர்கள் ஆடினர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் , கோப்பையும் வழங்கப்பட்டது.