பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு

சாகித்ய அகாடமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர்கள் காளிமுத்து, ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதை தொகுப்புக்காக காளிமுத்துவும், ‘மல்லிகாவின் வீடு’ எனும் சிறுகதை தொகுப்புக்காக எழுத்தாளர் ஜி.மீனாட்சியும் தேர்வாகியுள்ளனர்.

விருதுக்கு தேர்வான எழுத்தாளர்களுக்கு கேடயமும் ரூ.50,000 தொகையும் வழங்கப்படும். விருது வழங்கும் நிகழ்வு டல்லியில் வருகிற நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.