சி.எம்.எஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு துவக்க விழா

சி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் சி.எம்.எஸ் கல்வி நிறுவனங்களின் 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான தொடக்க விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கல்வியியலாளர் ஜெயந்தி ஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து ‘விரல் தொடும் தூரத்தில் வெற்றி’ எனும் தலைப்பில் தொடக்கவுரை ஆற்றினார்.

தலைமையுரை ஆற்றிய சி.எம்.எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜகோபாலன் கல்லூரிக்குப் புதிதாக வருகை தந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரையும், பெற்றோர்களையும் வரவேற்றுப் பேசினார். மாணவர்கள் தங்களின் வாழ்வை மேம்படுத்த கல்வி வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார். சன்னி டைமன்ஸின் முந்தைய கல்வி ஆண்டின் சிறந்த மாணவர் விருதினை கிரீதர்ராம் பெற்றார்.

சி.எம்.எஸ் கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் அசோக், செயலாளர் வேணுகோபால், துணைச் செயலளர் கிரீஸன், பொருளாளர் ரவிக்குமார், கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.