கோவை குறிச்சி குளத்தில் விடப்பட்ட மூன்று இலட்சம் மீன் குஞ்சுகள்

கோவையில் உள்ள குறிச்சி குளத்தில் மூன்று இலட்சம் மீன் குஞ்சுகள் இன்று விடப்பட்டுள்ளன.

கோவை பகுதியில் பருவ மழை அதிகரித்த வருவதால் குளங்களில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது இந்த சூழலை சாதகமாக பயன் படுத்தி கொள்ள  நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள்  முடிவு செய்தனர்அதன்படி ஆந்திர மாநில மீன் வியாபாரிகள் மூலமாக  சுமார் மூன்று இலட்சம் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டுள்ளன.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில்

தமிழ் நாட்டின் மொத்த நீர்ப்பரப்பு 3.63 லட்சம் எக்டர் ஆகும். இதில் 2.24 லட்சம் பரப்பளவிற்கு குளங்களும், குட்டைகளும், அமைந்துள்ளனஇந்திய மீன்களில் மிக வேகமாக வளரும் கட்லா வகை மீனினம் , உண்பதற்கு மிகச் சுவையானது என கருத்படும் ரோகு மற்றும் மிர்கால்  வகை மீன்கள் எங்களால் வளர்க்கப்படுகிறது. முன்று மாதங்களில் நன்கு பலனுக்கு வரும் 2 கிலோ எடையில் தொடங்கி நல்ல விலைக்கு போகும் என தெரிவிக்கின்றனர்..

குளத்தில் நீர் வந்தால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.