பளபளக்கும் வியாழன் கிரகம்!

விண்வெளி ஆய்வு செய்வதற்காக ‘ஜேம்ஸ் வெப்’ என்ற தொலைநோக்கு கருவி ஒன்றை  அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்கள் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

இக்கருவி சூரியனை சுற்றியுள்ள புவி வட்டப்பாதையில் இருந்து, 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த கருவி சமீபத்தில் படம்பிடித்த பிரபஞ்சத்தின் துவக்க கால புகைப்படங்கள் மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற மாதம் சூரிய குடும்பத்தின் 5தாவது வாயு கிரகமான வியாழனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. வியாழனின் மேற்பகுதி ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுவால் நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள் நாம் அடைய முடியாத மர்ம உலகத்தைப் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் நமக்கு வாய்ப்பளிக்கிறது. சமீபத்தில், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கிரகத்தின் சில புதிய படங்களை அமெரிக்காவை தளமாகக் கொண்ட நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (NASA) வெளியிட்டுள்ளது.

தொலைநோக்கியின் அருகிலுள்ள அகச்சிவப்பு கேமராவால் பிடிக்கப்பட்ட இந்த படங்கள், விண்வெளியில் உள்ள பொருட்களைக் கண்டறிய அகச்சிவப்பு கதிர்வீச்சைப் பயன்படுத்துகின்றன. இந்த புகைப்படங்கள் கிரகத்தின் கட்டமைப்பை மிக விரிவாகக் காட்டுகின்றன, மேலும் கிரகத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றியும் விவரங்களை கூறுகின்றன.

 

Story by – Sowndharya