குரூப் 1 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

கோவையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்விற்க்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் TNPSC GROUP – I தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மொத்தம் 92 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். முதல்நிலைத் தேர்வு நாள் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும். முதன்மை எழுத்துத்தேர்வு முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும்.

இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நேரிடையாக பயிற்சி வகுப்புகள் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பப் படிவத்துடன் அலுவலகத்திற்கு நேரிடையாக வருகை புரிந்து பயிற்சி வகுப்பிற்கு தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த இலவச பயிற்சி வகுப்பில், பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் தேர்ச்சி பெற அனைத்து வழிவகைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக்க்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்விற்கான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தேவைப்படும் தகவல்களை திரட்டி தேர்விற்கு தயார் செய்து கொள்ளலாம்.

போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.