பா ஜ க சார்பில் கிராமத்திற்கு நலத்திட்ட உதவிகள்

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஒரு கிராமத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது கிராமத்தை தத்தெடுக்கும் பிரதமரின் திட்டத்தின் கீழ் கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள உலியம்பாளையம் கிராமத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தத்தெடுத்து உள்ளார் .

இந்த கிராம வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல், மூலிகை செடிகளை நடுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கொங்கு நாடு நர்சிங் கல்லூரியின் அறங்காவலர் ஆர்த்தி கலந்து கொண்டனர். மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வகையில் வீடுகளுக்கு எல்.இ.டி பல்புகள் வழங்கப்பட்டது. குறிப்பாக இந்த கிராமத்திற்காக நூலகம் அமைக்கப்பட்டு அதற்கு இலவச வைபை வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கழிப்பிட வசதியும் , பொது இ சேவை மையமும்  அமைக்கப்பட்டுள்ளது உள்ளது. ஏராளமான பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.