கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாரத்தான் போட்டி

கோவை வ.உ.சி மைதானத்தில் யுவா பவுண்டேஷன் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கான மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

இந்த மாரத்தான் போட்டியை பிரபல சமையல் கலை நிபுணரும், குக் வித் கோமாளி புகழ் நடுவர் செஃப் தாமு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த மாரத்தான் ஓட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் யுவா பவுண்டேஷன் தலைவர் சசிகலா சத்தியமூர்த்தி, எஸ்.எஸ்.வி.எம் பள்ளி நிறுவனர் மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.