சென்னை தின கொண்டாட்டம்..!

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் “சென்னை தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை 383வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரை மாநகராட்சி சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த கொண்டாட்டத்தில் மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

அதில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளி கொணரும் வகையில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளது.

அதேபோல, சென்னை தின சிறப்பு ஏற்பாடாக எலியட்ஸ் கடற்கரையில் உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்பதால், விழா நிகழ்ச்சிகளில் மக்களின் நலன் கருதி மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாமிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.