வாழைநாரில் சானிடரி நாப்கின் தயாரிப்பு

சென்னை சேர்ந்த தம்பதி சக்திவர்ஷினி மற்றும் ஷனத்குமார் இருவரும் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி செய்து வந்தனர். ஆராய்ச்சி முடிவில் கண்டறிந்த சில தகவல்கள்.

சாதாரண நாப்கினால் வரும் விளைவுகள்:

சாதாரண நாப்ன்கில் பிளாஸ்டிக் ஜெல்கள் மற்றும் SAPஜெல்கள் பயன்படுத்தி தான் தயாரிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தினால் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். அதுமட்டுமல்லாமல் சாதாரண நாப்கினை எரிக்கும்போது போது வரும் புகையால் காற்று மாசும் ஏற்படுகிறது.

இதற்கு மாற்றம் என்ன என்பது பற்றி அவர் யோசிக்கும் போது எழுந்த எண்ணம் தான் “வாழை நாரில் சானிடரி நாப்கின் தயாரிப்பு”

வாழை நாரின் மகத்துவம் பற்றி இன்னும் சில பேருக்கு தெரியாமல் தான் இருக்கிறது. அதில் ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு தன்மை அதிகம் உள்ளதால் இதை பயன்படுத்தும் போது வாடை அடிக்காது. மற்ற நார்களை காட்டிலும் வாழைநாரில் குளிர்ச்சியும் தண்ணீர் உறிஞ்சும் திறன் அதிகம் கொண்டதால் இதை கொண்டு நாப்கின் தயாரித்தனர்.

“இதை பயன்படுத்தி வந்தால் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, உடலில் அரிப்பு, அலர்ஜி போன்றவை நீங்கி பெண்கள் ஆரோக்கியத்தோடு வாழலாம் என்ற முயற்சியில் கண்டறிந்தோம் என அந்த தாம்பத்தினர் தெரிவித்தனர்.

வேதி பொருட்கள், வாசனைப் பொருட்கள் சேர்க்காமல் உடலுக்கு தீங்கு விளைவிக்காத நிலையில் தயாரிக்கப்பட்டது தான் சானிடரி நாப்கின்.  இதை தாராளமாக பயன்படுத்துங்கள் என்று தெரிவித்தனர்.

 நாப்கின்கள் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்:

  1. ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதாக கூறுகிறது.
  2. நாப்கின்கள் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை, உற்பத்தி செலவை குறைப்பதற்காக, நாப்கின் தயாரிப்பு நிறுவனங்கள், நாப்கின்களை மீள் சுழற்சி (ரீசைக்கிள்) செய்யப்படும் காகிதங்களைக் கொண்டு தயாரிக்கிறது.
  3. நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் உருவாகிறது. 2-வது லேயர் ப்ளீச் செய்யப்பட்ட டிஸ்யூ காகிதத்தால் தயாரிக்கப்படுகிறது. 3-வது லேயர் ஈரப்பதத்தை தக்கவைக்கும் ஜெல்லாலும், மற்றும் 4-வது லேயர் லீக் ஆகாமல் இருப்பதற்கான பிளாஸ்டிக் லேயராக வைத்து நாப்கின் தயாரிக்கப்படுகிறது.
  4. டாயக்ஸின் என்ற வேதிப்பொருள் இல்லாத நாப்கின்களை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
  5. நாப்கின்களை பயன்படுத்தினாலும், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை அவசியம் மாற்ற வேண்டும்.
  6. முக்கியமாக வாசனை நிரம்பிய நாப்கினை பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  7. நாப்கின் பயன்படுத்தும் பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம்.

 

 source : BBC TAMIL