அறுசுவை வார சந்தை

இயற்கை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவையில் அறுசுவை வார சந்தையை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டு உள்ளது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் லீமார் ரோஸ் இந்த சந்தையை திறந்து வைத்தார்.

கோவையை அடுத்த ஆவாரம் பாளையம் பகுதியில் உள்ள,அறுசுவை பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய் நிறுவனம் சார்பில் அறுசுவை வார சந்தையை இன்று முதல் துவக்கி உள்ளனர். இந்த துவக்க விழாவில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் லீமார் ரோஸ் கலந்து கொண்டு சந்தையை துவக்கி வைத்தார். பின்னர் முதல் வியாபாரத்தை , லீமார் ரோஸ் பொருட்கள் வாங்கி துவக்கி வைத்தார். இயற்கை பொருட்கள் குறித்து பொதுமக்கள் மத்தியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சந்தையை ஏற்படுத்தி உள்ளனர். இந்த அறுசுவை வார சந்தையில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், இயற்கை உணவுகள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பண்டைய காலங்களில் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று உள்ளது. 20 க்கும் மேற்பட்ட அரங்குகளில் , பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இயற்கை சூழலை பொதுமக்கள் மத்தியில் கொண்டு வந்து , நோயற்ற வாழ்வை கொண்டு வர வேண்டும் என்ற முயற்சில் இந்த வார சந்தையை ஏற்படுத்தி உள்ளனர். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சந்தை செயல்பட உள்ளது. ஏராளமான பொதுமக்கள் பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.