விரைவில் ஐபோன் 14 வெளியீடு – அலர்ட் கொடுத்த ஆப்பிள் நிறுவனம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தொழிநுட்ப படைப்புகளை வெளியிடுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் ஐபோன் 14 வெளியாகவுள்ளது.

இந்திய மதிப்பில் $100 விலை உயர்வுடன் வரும் என்றும கூறப்படுகிறது. ஐபோன் 12 மற்றும் 13 க்கு இடையில் விலை மாற்றம் இல்லை ஆனால் ஆப்பிள் வினியோக சங்கிலியில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதால் தான் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது.

பேஸிக் ஐபோன் 14 மாடல் மொபைல்போன், புதிய மற்றும் பெரிய திரைக்கொண்ட ஐபோன் 14 மாடல் மொபைல்போன், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் என்னும் விதங்களில் வெளியிடுவதாக கூறப்படுகிறது.

மொபைல் போன்கள் தவிர ஆப்பிள் தனது புதிய வாட்ச் மாடல் களையும் வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.

எப்போது விற்பனைக்கு வரவுள்ளது:

வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி ஐபோன் 14 மாடல் அறிமுகமாக உள்ளது . ஐபோன் 14 மாடல்கள், ஸ்மார்ட் வாட்சஸ், ஏர்பாட்ஸ் உள்ளிட்டவைகள் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளது.

 

– கோமதிதேவி. பா