கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் ஆய்வு

கோவை பந்தய சாலையில் ரூபாய் 40.07 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகர திட்டம் மூலமாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.

பந்தய சாலை பகுதிகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைத்தல், ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுதல் , முக்கிய சந்திப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

உடன் துணை ஆணையர் போக்குவரத்து மதிவாணன், போக்குவரத்து உதவி ஆணையர் சரவணன், மத்திய மண்டல ஆணையர் சங்கர் ,உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் கமல கண்ணன், சுகாதார ஆய்வாளர் ஶ்ரீ ரங்கராஜ் ஆகியோர் உள்ளனர்.