ஏ.டி.எம். சேவைக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.மில் இருந்து 5 முறைக்கு மேலும், பிற ஏ.டி.எம்.மில் இருந்து 3 முறைக்கும் மேல் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டணம் தற்போது ரூ.21 ஆக அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்கள், வங்கி கணக்கில் இருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. அதற்குமேல் பயன்படுத்தினால் அதற்கான கூடுதல் கட்டணமாக ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.மையங்களில் எடுக்கும் ஓவ்வொரு பண  பரிவர்த்தனைக்கும் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.21 ரூபாய் என வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.