ஆர்.வி.கல்லூரியில் இலக்கியப் போட்டிகள்

காரமடை, டாக்டர்.ஆர். வி.கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்த்துறை இலக்கிய வட்டத்தின் சார்பாக 75 வது சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடர்பான தலைப்புகளில் வைக்கப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் அனைத்து துறை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.