கோவை புரோசோன் மாலின் தள்ளுபடி விற்பனைக்கு அமோக வரவேற்பு

கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள புரோசோன் மாலில், 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 சதவீதம் வரையிலான தள்ளுபடி விற்பனை ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெற்றது.

இதில் கோவை மற்றும் கோவையை சுற்றியுள்ள மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தள்ளுபடி மற்றும் மாலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இங்கு தினமும் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில பிரபல சின்னத்திரை மற்றும் பின்னனி பாடகர்கள் கலந்து கொண்டனர்.

இது பற்றி புரோசோன் நிர்வாகத்தினர் கூறும் போது: இவ்விழாவிற்கு கோவை மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வரும் காலங்களிலும் இந்த தள்ளுபடி விற்பனை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என தெரிவித்தனர்.