13 தங்கச் சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விட இந்திய அரசு திட்டம்

இந்தியாவில் உள்ள 13 தங்கச் சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விட இந்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 13 தங்கச் சுரங்கங்களில் 10 ஆந்திரபிரதேசத்திலும், 3 உத்தரப் பிரேதேசத்திலும் உள்ளன.
தங்க சுரங்கங்கள் உள்ளிட்ட கனிம சுரங்கங்கள் ஏலம் விடும் நடைமுறை 2015 இல் சுரங்க சட்டம் திருத்தப்பட்ட பின்பு தொடங்கியது.

இதன்படி கடந்த நிதியாண்டில் 45 கனிம சுரங்கங்களை இந்திய அரசு ஏலம் விட்டது. இதனை தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தில் உள்ள 10 தங்க சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பு மார்ச் மாதமும், உத்தரப் பிரேதேசத்தில் உள்ள மூன்று தங்க சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பு மே மாதமும் வெளியாகின.

ஆந்திர பிரதேசத்தில் ராமகிரி, கோசம் பள்ளி, ஜவகுலா ஆகிய இடங்களில் உள்ள தங்க சுரங்ககளின் ஏலம் ஆகஸ்ட் 26 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப் பிரேதேசத்தில் இருக்கும் சோனாபகாடி உள்ளிட்ட இடங்களில் உள்ள தங்க சுரங்கங்களின் ஏலமும் இந்த மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்புள்ளது. .

இவ்வாறு சுரங்கங்கள் ஏலம் விடப்படுவதன் மூலம் கிடைக்க பெறும் வருவாயில் கணிசமான பகுதி அந்தந்த மாநில அரசுகளுக்கு செல்வதாக இந்திய அரசு தெரிவிக்கிறது.

 

Source: BBC Tamil