சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் சுதந்திர தின விழா

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் நாட்டின் 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

பள்ளியின் கல்வி ஆலோசகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அவர் தனது சுதந்திர தினச் சிறப்புரையில், நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்தார், அவர்களை என்றென்றும் போற்ற வேண்டியது அனைவரின் கடமையாகும் என்றார். தேசிய கொடி உருவான வரலாற்றை எடுத்துரைத்தார்.

ஏழாம் வகுப்பு மாணவர் ரித்வின், ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற பாரதியாரின் கவிதையை வழங்கினார். ஒன்பதாம் வகுப்பு மாணவி தன்விகா ஹிந்தி மொழியில் சுதந்திர தினம் பற்றி உரையாற்றினார். பத்தாம் வகுப்பு மாணவர் செல்வசக்தி ஆங்கிலத்தில் சுதந்திர தினச் சிறப்புகளை உரையாக வழங்கினார்.

விழாவில், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.