“வானொலியின் தந்தை” மார்க்கோனி பிறந்த நாள்

மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். ‘நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர். ‘ கம்பியற்ற தகவல்தொடர்பு முறை’ மற்றும் ‘மார்க்கோனி விதி’ ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் ‘மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்’, ‘வானொலி’மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.