ஆர்.வி கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்டம்

டாக்டர். ஆர்.வி‌.கலை அறிவியல் கல்லூரியில் 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தினவிழா உரையாற்றினார்.

அவர் பேசிய உரையில், நம் நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தி தம் இன்னுயிர் நீத்தவர்கள் பலர். இப்படி பல பேர் உயிர் நீத்து போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரது கடமையாகும். அரசு அறிவித்தபடி இந்த 76 வது சுதந்திர தினத்தன்று ஒவ்வொருவருடைய வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றி வைத்து ஒவ்வொரு இந்தியரும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த வேண்டும்.

நம் நாட்டு மக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்றும் நம் நாட்டின் எல்லையில் நின்று தம் உறவுகள் துறந்து பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல் எதிரிகளிடமிருந்து நம்மை பாதுகாத்து வருகின்றனர் நம் இராணுவ வீரர்கள். நம் நாட்டிற்காக உயிரையும் இழக்கின்றனர். அவர்கள் விட்டுச் சென்ற மூச்சுக்காற்றிலே அசைவது தான் இந்த மூவர்ணக் கொடி. அதனைப் போற்றி வணங்குவோம்‌‌. நாட்டைக் காப்போம் என்று பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இதனைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் சீனிவாசன், கல்லூரியின் அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.