இந்துஸ்தான் மருத்துவமனையில் ‘சுவர்ணம்’ மருத்துவ சேவை துவக்கம்

கோவை இந்துஸ்தான் மருத்துவமனையில் மூத்த குடிமக்களுக்கான புதிய மருத்துவ சேவையான சுவர்ணம் என்ற ஹெல்த் கிளப் திங்கட்கிழமை துவங்கப்பட்டது.

இதில் மருத்துவ திட்டத்திற்கான உறுப்பினர் அட்டையை இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்சுவதி கண்ணையன் வெளியிட்டார்.

மூத்த குடிமக்கள் இந்த ஹெல்த் கிளப்பில் இணைந்து இலவச ரத்தம் மற்றும் இதர பரிசோதனைகள், இலவச சிறப்பு மருத்துவரின் ஆலோசனை, நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சைகள், அவசர சிகிச்சைக்கு வழிகாட்டுதல், ஆம்புலன்ஸ் உதவி, சிறப்பு மருத்துவரின் ஹெல்த் டிப்ஸ், உள்நோயாளி பிரிவில் சலுகை, மருத்துவமனையில் பிரத்தியேக தனிநபர் உதவி, மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கு பெறலாம்.

இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் இந்துஸ்தான் மருத்துவமனையின் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் பாலகுமார், இந்துஸ்தான் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சதிஷ் பிரபு, இந்துஸ்தான் மருத்துவமனையின் சர்க்கரை நோய் நிபுணர் செந்தில்குமார். இந்துஸ்தான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளர் டாக்டர்.சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.