கோவையில் பாஜக சார்பில் ‘வந்தே மாதரம்’ பேரணி

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வந்தே மாதரம் பேரணி நடைபெற்றது.

சிவானந்த காலனியில் துவங்கிய இந்தப் பேரணியை பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். இதில் பொதுமக்களும், பாஜக தொண்டர்களும் தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணியில் திரளாக பங்கேற்றனர்.