வண்ண விளக்குகளால் மிளிரும் விக்டோரியா ஹால்

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மூவர்ண கொடி வண்ணத்தில் ஒளி விளக்குகள் அமைத்து அலங்காரம் செய்யப்பட்டு மிளிர்கிறது.

கோவை டவுன்ஹால் பகுதியில் விக்டோரியா ஹால் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு சிறப்பு தினங்களில் மிளிரும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

தற்போது 75 வது சுதந்திர தின விழாவை ஒட்டி விக்டோரியா ஹால் கட்டிடத்தில் மூவர்ணக் கொடி ஒளி அமைப்புகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு வரும் பொது மக்கள் அந்த மூவர்ணக் கொடி அலங்காரத்தை பார்த்து ரசித்து வருவதோடு புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர்.

75 வது சுதந்திர தினத்தையொட்டி கொடி விற்பனையும் தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது.