ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு துவக்க விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் உமா அனைவரையும் வரவேற்று பேசினார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் லக்ஷ்மிநாராயணசுவாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக கோவை, பாரதியார் பல்கலைகழகத்தின் கல்வியியல் துறை டீன் விமலா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அவர் பேசும்போது, மாணவர்கள் திறன் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நிறுவனங்கள் தேவையான தொழில் அனுபவம் மற்றும் பன்முகதிறன் வாய்ந்தவர்களையே தங்களின் நிறுவனங்களுக்கு பணியமர்த்த விரும்புகின்றனர். மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே அத்தகைய அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கடந்த கல்வியாண்டில் வாரிய தேர்வில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற ஒவ்வொரு துறை மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கபட்டது.