75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ப்ரோஜோன் மாலில் சிறப்பு தள்ளுபடி விற்பனை

கோவை சரவணம்பட்டி ப்ரோஜோன் மாலில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது.

இது குறித்து புரோஜோன் மால் தலைவர் அம்ரிக் பனேஸர், மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலியக்க தலைவர் முசாமில் ஐ, செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் முரளி ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது, 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 முதல் 15 வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது.

இதில் வாடிக்கையாளர்களுக்கு அதிக பட்சமாக 75 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி உள்ளது. மேலும் ரூபாய் 5,999க்கு பர்ச்சேஸ் செய்பவர்களுக்கு ரூபாய் 500 கான சிறப்பு உணவு கூப்பன் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும் 12ம் தேதி அன்று குழந்தைகளுக்கான சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், 13ம் தேதி அன்று விஜய் டிவி குக்வித்து கோமாளி புகழ் பாலாவின் கலை நிகழ்ச்சிகளும், 14ம் தேதி அன்று விஜய் டிவி சூப்பர் சிங்கர் மற்றும் பின்னணி பாடகர் சாம் விஷாலின் இசை நிகழ்ச்சியும், 15ம் அன்று குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகளும் நடைபெற உள்ளது.