பவள விழா கொண்டாட்டம் பி.எஸ்.ஜி கலை கல்லூரியில் அஞ்சல் தலை வெளியீடு

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு முதல் தனது கல்வி பயணத்தை தொடங்கிய பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தனது 75 வது ஆண்டை நினைவு கூறும் வகையில் பவள விழா கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.டி கலை அரங்கத்தில் அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பிருந்தா வரவேற்புரை ஆற்றினார்.

பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை ஏற்று உரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அத்வைத் லட்சுமி இண்டஸ்ட்ரிஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் ரவிசாம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அஞ்சல் தலையை வெளியிட நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கோவை கோட்டம் அஞ்சலக மேல்நிலை கண்காணிப்பாளர் கோபாலன் அதனை பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் செயலர் கண்ணையன் நன்றி கூறினார்.

(மேற்கண்ட செய்தி குறித்த விரிவான தகவல் சிறிது நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.)