பி.எஸ்.ஜி கலை கல்லூரியில் நாளை அஞ்சல் தலை வெளியீடு

பவள விழா கொண்டாட்டம்

சுதந்திர இந்தியாவுடன் 1947 ஆம் ஆண்டு முதல் பயணித்து வரும் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பவள விழா கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றது. அந்நிகழ்வின் ஒரு பகுதியாக நாளை (ஆகஸ்ட் 11) அஞ்சல் தலை வெளியிடப்பட உள்ளது.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பிருந்தா வரவேற்புரை ஆற்றுகிறார். நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் விழா தலைமை ஏற்கிறார். அத்வைத் அகாடமி நிறுவனர் ரவிசாம் சிறப்புரை ஆற்றுகிறார்.

அஞ்சலக மேல்நிலை கண்காணிப்பாளர் கோபாலன் அஞ்சல் தலையை வெளியிடுகிறார். பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் செயலர் கண்ணையன் விழாவிற்கு நன்றி கூறுகிறார்.